தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு…  

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு…   

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

டிசம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகள் முழுவீச்சில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதில் ஒரு கட்டமாக இன்று வாக்காளர் பட்டியல் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக மாவட்டங்களில் வெளியிடப்படவுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பணிகளை விரைவாக செய்து வருகிறது. நேற்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஏற்கனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல், மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக வாக்காளர் பட்டியலை இன்று அந்தந்த மாவட்டங்களில் வெளியிடப்படுகிறது.

தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் தேர்தலுக்கு தயார் நிலையில் அலுவலர்கள் உள்ளனரா, மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே, கிராம ஊராட்சி வார்டு வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.