மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு.. பணிகளுக்காக ரயில்கள் வழிதடத்தில் மாற்றம்!!

சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கென, மவுண்ட் ரோடு, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு.. பணிகளுக்காக ரயில்கள் வழிதடத்தில் மாற்றம்!!
Published on
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணியின் கீழ், போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை 4வது வழிதடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிதடத்தில் சோதனை ஓட்டமானது இன்று இரவு 11 மணிக்கு துவங்கி நாளை அதிகாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  அதனைத்தொடர்ந்து இரண்டு மாதங்கள் அந்த வழிதடத்தில் போக்குவரத்து மாற்றம் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

அதன்படி போரூரிலிருந்து, மவுண்ட் - பூந்தமல்லி -ஆவடி  சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி செல்லும் வாகனங்கள், வலதுபுறம் திரும்பி  மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, சவீதா பல்மருத்துவமனை வழியாக இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்புக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவிதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து போரூர் நோக்கி செல்லும் கனரக, இதர வணிக வாகனங்கள்,  குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவணை, ஏசிஏஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக சென்று, மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக  சுங்கச்சாவடி அருகே இடதுபுறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரங்களை ஆவடி காவல் ஆணையரகத்தின் டிவிட்டர் பக்கத்திலும், போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறையிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com