சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு...

சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவையில்  இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு...

சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக தமிழக சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், முதலாவதாக நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பிறகு பேசிய அத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும், தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும், திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கே.என் நேரு, அறிவிப்புகளை வெளியிட உள்ளார். இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைச்சர் பெரிய கருப்பண் விவாதத்தில் பங்கேற்க உள்ளார்.