எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம்!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம்!!

நாளை காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது, சொந்த ஊர்களுக்கு சென்ற மூத்த தலைவர்கள் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ் மற்றும், சசிகலா தனித்தனியாக சுற்றுபயணம் துவங்கிய நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓ. பி எஸ் ஆதரவாளர்களை கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கைகள் மேற்க்கொள்ள ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே  ஓபிஎஸ் மீது நடவடிக்கை தொடங்கி இருக்கிறது. நமது அம்மா  நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து  ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவானவர்களை கட்சியில் கட்டம் கட்ட ஈபிஎஸ் தரப்பு  முடிவு செய்துள்ளது.