முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை... முக்கிய ஆவணங்கள் சிக்கியது...
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு.

உடுமலை அருகே ஓடும் பேருந்தில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
உடுமலை அருகே ஓடும் பேருந்தில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
உடுமலையையடுத்த கல்லாபுரம் இந்திரா புதுநகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் தண்டபாணி(42). கூலித் தொழிலாளியான, இவர் அமராவதி நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது 6 மற்றும் 7 ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் அதே பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இருக்கையில் அமர்ந்திருந்த அந்த சிறுமிகளிடம் தண்டபாணி பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு சிறுமியின் தாயார் உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தண்டபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழியில், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலும், கர்ப்பிணி பெண்ணுக்கு மகிழ்ச்சியோடு வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரைப்புரண்டு ஓடும் வெள்ளநீர்:
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீரானது கரைபுரண்டு ஓடுகிறது.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள்:
சீர்காழியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர், பழையார் அருகே உள்ள கடலில் கலக்கிறது. இதனால், ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையே கடந்த 6 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் படகின் மூலம் தண்ணீரை கடந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
வளைகாப்பு விழா:
இதனிடையே நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவி சிவரஞ்சனிக்கு இன்று வளைகாப்பு விழா நடத்துவதாக ஏற்கனவே, முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ள இந்த கடினமான சூழ்நிலையிலும், தாங்கள் தங்கியுள்ள அரசின் நிவாரண முகாமிலேயே விழாவை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சிவரஞ்சனிக்கு வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நெகிழ்ச்சி ஏற்படுத்திய தருணம்:
தண்ணீர் சூழ்ந்து வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தங்கியுள்ள போதிலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல், மனைவிக்கு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியை கணவன் நடத்தியதும், அந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இளம்பெண்னுக்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வும் பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி குட்செட் பகுதியில் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி குட்செட் பகுதியில் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் காரணத்தால், குட்செட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ரயில்வே முதுநிலை கமர்சியல் மேலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரைந்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரக்கோரி இன்று காலை முதல் ரயில்வே சரக்கு வேன்களில் வரும் உரம், கோதுமை மற்றும் மத்திய தொகுப்பிற்கு கொண்டு செல்லப்படும் சிமென்ட் மூட்டைகளை இறக்க மறுத்தும், சரக்கு லாரிகள் இயக்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 450க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குட்ஷெட்டில் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதாகவும், 1ம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் முன்வராவிட்டால் ஒன்றாம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் குட் ஷெட் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவோம் எனவும் ரயில்வே நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் பணியை தொடங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தை மாநகராட்சி அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டு 45 குடும்பங்கள் வசித்து வந்தனர். தற்போது இந்த இடத்தில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்த இடம் அருந்ததியர் அல்லாதவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆணையருக்கு சொந்தமான இடம் என பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அருந்ததியருக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆணையர் என்று பெயர் மாற்றம் செய்ததோடு அருந்ததியர் அல்லாதவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ததை கண்டித்தும், மாநகராட்சி அந்த இடத்தை கையகப்படுத்தும் முயற்சியை கண்டித்தும் அருந்ததியர் இன மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் இளமதி கூறும் போது " மன்னர்கள் காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இடம், தற்போது மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெருவில் நிற்கும் சூழ்நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக அந்த முயற்சியை கைவிட வேண்டும் " என கூறினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர்களுடன், போதைப் பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், அழிவுப்பாதைக்கு வழி வகுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு, தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் எனக்கூறினார்.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றிலுமாக தடுக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஆணையர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். போதை என்பது தனிமனித பிரச்சினை அல்ல, சமூக தீமை என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
போதைப் பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி, விற்பனை செய்வோரின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும் பேசினார். பள்ளிக் கல்லூரிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப் பொருள்களை நுழைய விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.