இந்த மாவட்டத்திற்கு மட்டும் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!

கோவையில் கொரோனா பரவல் மீண்டும் மிரட்டி வருவதால், அங்கு நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார்.

இந்த மாவட்டத்திற்கு மட்டும் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகங்கள், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கோவை மாநகராட்சியில் கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, உள்ளிட்ட தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், அப்போது 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள மாவட்டட ஆட்சியர் சமீரன், அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி என்றும், சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சந்தைகளில் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும் என்றும், இதனை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.