தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% தேர்ச்சி.. மாணவர்களை விட மாணவிகள் 8.55% அதிகம் தேர்ச்சி!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 90 புள்ளி 07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% தேர்ச்சி.. மாணவர்களை விட மாணவிகள் 8.55% அதிகம் தேர்ச்சி!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 புள்ளி 55 லட்சம் மாணவ மாணவிகள், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

இதையடுத்து இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி, 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவிகளும், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 8 புள்ளி 55 சதவீதம் மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 

சமூக அறிவியல் பாடத்தில் ஆயிரத்து 9 பேரும், தமிழ் பாடத்தில் ஒருவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், 97 புள்ளி 22 தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடத்திலும், பெரம்பலூர் 97 புள்ளி 15 சதவீதத்துடன் 2ஆவது இடத்திலும், விருதுநகர் 95 புள்ளி 96 சதவீதத்துடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.

வேலூர் மாவட்டம் 79 புள்ளி 87 சாதவீதத்துடன் குறைந்த தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போதைய பொதுத்தேர்வில் 10ஆம் வகுப்பு மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.