தமிழகத்தில் தக்காளி வைரஸ் இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் !

தமிழகத்தில், தக்காளி வைரஸின் தாக்கம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தக்காளி வைரஸ் இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் !

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுகாரதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தக்காளி வைரஸின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும், மக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்