ஊட்டச்சத்து மாத்திரைகள் உண்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள்!!

ஊட்டச்சத்து மாத்திரைகள் உண்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள்!!
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து மாத்திரைகள் உண்ட பள்ளிக்குழந்தைகளுக்குr உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தகவல் அளித்துள்ளார். அதன்படி மாத்திரைகள் உண்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மாத்திரைகளின் மாதிரிகள் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com