கல்லூரியில் குடிநீர் தொற்றால் விடுதி மாணவிகளுக்கு நடந்த விபரீதம்..!

கல்லூரியில் குடிநீர் தொற்றால் விடுதி மாணவிகளுக்கு நடந்த விபரீதம்..!

தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் குடிநீரில் ஏற்பட்ட தொற்று காரணமாக மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கல்லூரிக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை பீளமேடு பகுதியில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாணவிகளுக்கான கல்லூரி விடுதி ஹோப்ஸ் சிக்னல் அருகே செயல்பட்டு வருகிறது.

நேற்று  விடுதியில் மாணவிகளுக்கு தீடிரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே மாணவிகள் விடுதியின் சார்பில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

30-க்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று உடனே விடுதி திரும்பினர்.லேசான பாதிப்பு என்பதால் மாணவிகள் சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் விடுதி திரும்பி விட்டதாகவும், தண்ணீரில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இருக்கலாம் என விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். கல்லூரி மற்றும் விடுதியில் கோவை மாநகராட்சி  சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.சுகாதாரத்துறை ஆய்வில் குடிநீரில் ஏற்பட்ட மாசு தொடர்பான விவரங்கள் அறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு வரும் 24 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க   |  திண்டுக்கல்லில் தனியாா் பேருந்து கண்ணாடி உடைப்பு..!