தமிழகத்தில் "மதத்தின் பெயரால், பிரிவினை ஏற்படுத்த முடியாது" - அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மதத்தின் பெயரால், யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் "மதத்தின் பெயரால், பிரிவினை ஏற்படுத்த முடியாது" - அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மத்திய ஒன்றியத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தை மத்திய ஒன்றிய செயலாளர் பொன்முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிகழ்வின் போது 10 பேருக்கு தையல் மெஷின்,300 பேருக்கு வேட்டி,சேலை, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் மதத்தின் பெயரில் வன்முறை மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் யாராலும் செயல்பட முடியாது எனவும், தொகுதியில் நின்று ஒரு எம்எல்ஏவாக கூட முடியாத அண்ணாமலையை தமிழக பாஜகவிற்கு தலைவராக நியமித்தது மிகப்பெரிய கேடு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.