
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.
தொடக்க விழா:
சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில்
புதுமைப் பெண் திட்டம், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் திட்டங்களின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். மேலும் இவ்விழாவில், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பெருந்திரளான கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.
புதுமைப் பெண் திட்டம்:
இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 30 மாணவிகளுக்கு டெபிட் கார்டுகளை வழங்கினார்.
முன்னதாக, 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.