இன்னும் 4 ஆண்டுகளில் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை - முதலமைச்சர் உரை!

இன்னும் 4 ஆண்டுகளில் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை - முதலமைச்சர் உரை!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுமைப் பெண் திட்டம்:

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்று கூறிய முதலமைச்சர், இத்திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஸ்மார்ட் வகுப்பறை:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பணம் இருப்போருக்கு ஒரு கல்வி, இல்லாதோருக்கு ஒரு கல்வி என்பதை போக்கவே தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். மேலும், பேராசிரியர் அன்பழகனார் பெயரிலான திட்டத்தின் மூலமாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவுள்ளதாகவும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com