16 அடி உயரத்தில் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலை திறப்பு...!

16 அடி உயரத்தில் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலை திறப்பு...!
Published on
Updated on
1 min read

சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, 3 நாள் சுற்றுப்பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் 713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச்சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து, சேலத்தில் 96 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து இயக்கத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com