கொட்டும் மழையில் எரியும் பிணங்கள்... தகனமேடை இல்லாததால் அவலம்...

சிவகங்கை மாவட்டம் வீரப்பட்டி அருகே தகனமேடை இல்லாததால் கொட்டும் மழையில் பிணங்கள் எரிக்கப்படும்  வீடியோவால் பரபரப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொட்டும் மழையில் எரியும் பிணங்கள்... தகனமேடை இல்லாததால் அவலம்...
Published on
Updated on
1 min read

சிவகங்கை அடுத்துள்ள கீழப்பூங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பட்டி என்னும் கிராமத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இறந்தவரின் உடலை  வெளி எரிபொருள் கொண்டு எரியூட்டபடுகின்றன. மரணமடைந்து விட்ட மனிதனின் உடல் சமய வழக்கங்களின்படி மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது எரியூட்டப்பட்டோ அழிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகில் அதிக அளவாக இறந்து விட்ட மனித உடல்கள் புதைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சமய வழக்கங்களின்படியோ அல்லது இடநெருக்கடி காரணமாகவோ இறந்து விட்ட மனித உடல்கள் எரியூட்டப்பட்டும் அழிக்கப்படுகின்றன. இத்தகைய தகனத்தின் போது உடல் முழுமையாக எரிந்து சாம்பலாவதில்லை.

பதிலாக எலும்புகள் மட்டுமே எரியா நிலையில் கிடைக்கின்றன  வீரப்பட்டி என்னும் கிராமத்தில் தகனமேடை இல்லாததால் கொட்டும் மழையில் பிணங்களை எரியூட்டும் அவலநிலை ஏற்படுகின்றது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை என்பதே இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தகனமேடை அமைத்து தரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. கொட்டும் மழையில் பிணங்களை எரிக்கும் பொழுது எடுத்த வீடியோவால் இப்பகுதியில் பரபரப்புஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com