"அரசியல் காரணங்களுக்காகவே வருமான வரித்துறை சோதனை" அமைச்சர் பெரியசாமி!

"அரசியல் காரணங்களுக்காகவே வருமான வரித்துறை சோதனை" அமைச்சர் பெரியசாமி!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் காரணம் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேட்டியளித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவை தமிழக அமைச்சர்கள் இன்று துவங்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்பாடு செய்ய திட்ட வரைவு தயார் செய்து உள்ளதாகவும், கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய மாற்றுச்சாலை திட்டங்கள் ஏற்படுத்த தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வருமான வரி துறை சோதனை நடத்தி வருவது அரசியல் காரணம் எனவும், இதனை அரசியல் ஆக்க பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று வழி பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை இதில் அடங்கியுள்ளதால் வனத்துறையிடம் தடையில்லா சான்று வாங்க அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?