சென்னையில் 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு...!

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியதில் 4 இடங்களில் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கெஸ்ட் ஹவுஸ், கோட்டூர்புரத்தில் உள்ள அப்பாசாமி கட்டுமான நிறுவன தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன், அமைந்தகரை தொழிலதிபர் செவ்வேல், பூக்கடை பகுதியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ராஜசேகர் ஆகியோரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இதையும் படிக்க : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கொட்டி தீர்த்த கனமழை...!

இதையடுத்து திருவான்மியூர் பகுதியில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று அலுவலகத்திலும், தொழிலதிபர் அபிராமி ராமநாதனுக்கு தொடர்புடைய இடங்களான மயிலாப்பூர், போயஸ் கார்டன், மந்தைவெளி ஆகிய பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் திருமங்கலம் சிண்டிகேட் காலனி பகுதியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் கமலாக்க ரெட்டி வீட்டிலும், தியாகராய நகரில் உள்ள அப்பாசாமி கட்டுமான நிறுவன உரிமையாளர் குடும்பத்திற்கு சொந்தமான 2 ஓட்டல்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.