ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஐ.டி. சோதனை...!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஐ.டி. சோதனை...!

கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகள் மற்றும் அவருடைய  ஆதரவாளர்கள் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : பள்ளிகள் திறப்பு தேதியில் அதிரடி மாற்றம்...மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

இந்நிலையில், கோவை மாவட்டம் கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, வீடு மற்றும் வீட்டில் உள்ள கணினிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இவர் அதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.