ஸ்ரீ ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை!

கோவை ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 
ஸ்ரீ ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை!
Published on
Updated on
1 min read

நெல்லையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஸ்ரீ ஆனந்தாஸ் குழும உணவகம், நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் அதன் கிளை உணவகங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில்  வடவள்ளி, காந்திபுரம், ராம்நகர், லட்சுமி மில்ஸ், அவினாசி சாலை, சுந்தராபுரம், புரூக்பீல்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆனந்தாஸ் உணவகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும்,  ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்தின் இயக்குனர்களின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகள் என 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com