பிரபல ஜவுளி கடைகளில் வணிக வரித்துறை சோதனை…  

கோவை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் வணிக வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பிரபல ஜவுளி கடைகளில் வணிக வரித்துறை சோதனை…   

கோவை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் வணிக வரித்துறை சோதனை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் உள்ள பிரபல துணிக்கடைகள்  உள்ளிட்ட 13 இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் பிரபல துணிக்கடைகளில், வணிக வரித்துறையினர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வகையில், கோவையில் மட்டும் 13 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஓப்பணக்கார வீதி, கிராஸ் கட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும்,  முன்னணி ஜவுளி நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 13 இடங்களில் வணிக வரித்துறையினர்  சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று,  நெல்லை டவுன், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில், வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.