சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு ...! பீதியில் வாகன ஓட்டிகள்...!

செங்கல்பட்டு
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில்
அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்க
செங்கல்பட்டு அடுத்த
இதன்மூலம்
செங்கல்பட்டு
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில்
அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்க
செங்கல்பட்டு அடுத்த
இதன்மூலம்
நாதுராம் கோட்ஸே குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய பாஜக அமைச்சருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வெள்ளிக்கிழமை பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்; அவர் பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது,” என்று கூறி இருக்கிறார்.
பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது.
தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்."
என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ”தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் விவகாரத்தில் நடந்தது தவறுதான்” - அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பெங்களூருவில் உடல் வீசப்பட்டுள்ள நிலையில் அவர் யார் என்று கண்டுபிடிக்க அவரது அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ள காவல் துறை.
பெங்களூரு நகரில் பெலந்தூர் பகுதியில் உள்ள ஹர்யானா அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 9 ஆம் தேதி இளைஞர் ஒருவரது உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இளைஞர் மரணம் தொடர்பாக மாரத்த ஹள்ளி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இளைஞரின் அடையாள அட்டை எதுவும் இல்லாத நிலையில் இறந்த இளைஞர் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறை திணறி வருகிறது. இந்நிலையில் அவரது உடலில் தமிழ் மொழியில் கௌதம் நித்தியா பச்சை குத்தியிருப்பதால் இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என காவல்துறை கருதி அவரது அங்க அடையாளங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடி வருகிறது.
இறந்தவர் வயது 28 முதல் 35 வரை இருக்கலாம் என்றும் கடந்த ஒன்பதாம் தேதி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆறாம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்தவர் உயரம் 5.2 அடி உயரம் கொண்டவர், கருப்பு நிறம் மேலும் கட்டு மஸ்தான உடல் கொண்டவர் என்பதால் இவர் தொடர்ந்து ஜிம் செல்பவராக இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது கையில் கௌதம் நித்தியா என தமிழ் மொழியில் பச்சை குத்தியிருப்பது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் ஏ எஸ் கே என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது.
மேலும் அவரது கையில் நடு விரல் பாதியாக உள்ளது. இந்த அடையாளங்களை யாரேனும் கண்டு கொண்டால் உடனடியாக வைட் ஃபீல்ட் பகுதி கட்டுபாட்டு அறைக்கு 07411747100 தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | டிஜிட்டல் பண பரிவர்த்தனை: உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடம்..!
நாகை: நாகப்பட்டினத்தில் உள்ள கிராமத்தில், அடிபம்பு ஒன்றில், அடிக்காமலேயே தண்ணீர் வரும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டம் சடையப்பர் கோவில் தெருவில், பஞ்சாயத்து நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த 15 வருடங்கள் பழைமையான அடிபம்பு ஒன்று உள்ளது.
அப்பகுதியில் இருப்போர் அவ்வப்போது அந்த அடிபம்பை உபயோகித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அடிபம்பில் கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறின் காரணமாக, அடைப்பம்பினை அடிக்காமலேயே தண்ணீர் வெளிவருவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அடிபம்பிலிருந்து, அடிக்காமலேயே அதிகளவு தண்ணீர் வெளிவந்து வீணாகிக் கொண்டிருப்பதை மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றாலும், ஒரு புறம் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
அடிபம்பில் ஏற்பட்ட கோலாரை பஞ்சாயத்து நிர்வாகம் சரிசெய்யும்மா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொன்முடி நினைத்திருந்தால் விழுப்புரம் மாவட்டம் மேல் பாதிதியில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என திண்டிவனத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏஜி சம்பத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசும்போது, தமிழர்கள் போற்றுகின்ற செங்கோலை பாராளுமன்றத்தில் கொண்டு சென்று வைத்ததன் மூலம் தமிழர்களாகிய நாம் அனைவருக்கும் பெருமை துணைஎரு கூறியவர்,
இதனைப் பற்றி பேசி தமிழுக்கும், தமிழர்களுக்கும் துரோகிகளாகவும், விரோதிகளாகவும் யாரும் மாறிவிடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்மேல்பாதி கோவிலுக்கு சீல் வாய்த்த விவகாரம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்து பேசும்போது:
" விழுப்புரம் மாவட்டம் மேல் பாதியில் நடைபெற்ற ஜாதி மோதலை அமைச்சர் பொன்முடி நினைத்திருந்தால தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஏனென்றால் பொன்முடிக்கு அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் இருக்கின்றது. அந்த கிராமம் ஏறக்குறைய அவருக்கு சொந்த கிராமம் மாதிரி. அதனால் தான் சொல்கிறேன், அவர் நினைத்திருந்தால் அந்த ஜாதி மோதலை தடுத்து நிறுத்தி இரு சமுதாய மக்களையும் சமாதானப்படுத்தி கோயில் பூட்டப்பட்டதை தடுத்திருக்கலாம் . மாறாக நடைபெற்ற சம்பவத்திற்கு பல்வேறு காரணங்களை சொல்வதன் மூலம் சம்பவத்தை மடை மாற்றிவிட முயற்சி செய்கின்றார்கள்", என்று காட்டம் தெரிவித்தார்.
இதையும் படிக்க | "தேசிய விளையாட்டு; மீண்டும் இதுபோன்று தவறு நடக்காது" உதயநிதி உறுதி!
பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை அனுப்பாத தவறு இனி நடைபெறாது என அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்கத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும், 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, தீவிர விசாரணை செய்த பின்தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது எனவும் கூறினார்.
இதையும் படிக்க : ”தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் விவகாரத்தில் நடந்தது தவறுதான்” - அமைச்சர் அன்பில் மகேஷ்!
இதனை தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில், மகளிர் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேட்டியளித்தார். அப்போது மகளிர் காவலர் நலனில் திமுக அரசு என்றும் அக்கறை கொண்டிருக்கும் என தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் கூடம் மற்றும் புதிய உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்தார்.
இறுதியாக வீரர் வீராங்கனைகள் அமைச்சர்கள் முன்னிலையில் ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.