தொடரும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தொடரும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு!
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் கன மழை  பெய்து வருகிறது. 

இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல், இடைவிடாது மழை பெய்து வருவதால் சென்னையின் முக்கிய இடங்களில், வழக்கம் போல் நீர் தேங்கி நிற்கின்றது.

இந்நிலையில், கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 1146 கன அடி கூடுதலாக உயர்ந்துள்ளது.  இந்த ஏரியிலிருந்து 174 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 காண அடியில், தற்போது 2403 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. 

இதில் 225 அடி கன அடி நீர் கிருஷ்ணா நதி நீர் வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com