கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.. கரை புரண்டு ஓடும் வெள்ள நீர்...!

கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.. கரை புரண்டு ஓடும் வெள்ள நீர்...!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4ஆயிரத்து 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, அணைக்கு வினாடிக்கு, 3 ஆயிரத்து, 982 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து, 4 ஆயிரத்து, 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.