பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு...!

ஈரோடு மாவட்டத்தில்  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 400 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதாலும்,, கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தாலும், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : இரண்டு நாள் சோதனைக்கு பின் அபிராமி ராமநாதனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை!

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் - 65புள்ளி 84 அடியாகவும், நீர் இருப்பு  9புள்ளி 29 டிஎம்சி யாகவும் உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு  5ஆயிரத்து 402 கன அடியாக உள்ளதால்  400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.