
சென்னையில் கொரனோ பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரனோ இரண்டாவது அலையில் கொரோனோ தொற்று அதிகபட்சமாக பதிவாகிய நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நோய் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து காணப்பட்டது.
மேலும், முதல் அலை காட்டிலும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து பதிவாகியிருந்தது. இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 26ஆம் தேதி சென்னையில் 122 ஆக பதிவாகிய பாதிப்பு, அடுத்தடுத்த நாட்களில் 139 ஆகவும் 164 ஆகவும் பதிவாகியுள்ளது.