காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்... மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்... மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்...

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில்  மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு இல்லாமல் மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 76 பயனாளிகளுக்கு 49லட்சத்து 33 ஆயிரத்து 657 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை  துணைத்தலைவர் சத்தியபிரியா,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட அலுவலர்  ஸ்ரீதேவி ,  வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.