இந்தியன் ரேசிங் Festival 2023-ல் பார்வைக்காக வைக்கப்பட்டது கால்ஸ் குழுமத்தின் Foster's ஹெல்மெட்!

ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்தும் இந்தியன் ரேசிங் Festival 2023-ல், இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற போட்டியில், சென்னை, ஹைதராபாத், கோவா, பெங்களூரு, கொச்சி, டெல்லியைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் மற்றும் 4 வீரர்கள் என மொத்தம் 24 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்கும் கார்கள், பந்தயத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக, போட்டியில் பங்குபெறும் கார்கள், ஓட்டுநர் மற்றும் எரிபொருள் உட்பட, நிகழ்வின் அனைத்து நேரங்களிலும், காரின் குறைந்தபட்ச எடை 460 கிலோவாக இருக்க வேண்டும். அதேபோல், பிரேக் குளிரூட்டலுக்கான குழாயை சேர்க்க அணிகளுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : "ED அதிகாரி கைது செய்யப்பட்டதை அரசியலாக்கக் கூடாது" - அண்ணாமலை

இந்த போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள், உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பதோடு, சிறு வயது முதலே பல்வேறு கட்டங்களாக பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கேற்றவர்கள்.

இந்த போட்டி நடைபெறும் வளாகத்தில், கால்ஸ் குழுமத்தின் ஹெல்மெட் பிராண்டான ஃபாஸ்டர்ஸ் ஹெல்மெட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கால்ஸ் குழுமம் இந்த போட்டியில் ஒரு ஸ்பான்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபார்முலா 4-ன் இறுதிப்போட்டி, டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில், சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.