இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் வெளிநோயாளிகள் பிரிவு தொடக்கம்..!

இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் வெளிநோயாளிகள் பிரிவு தொடக்கம்..!

இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான வெளிபுற நோயாளி பிரிவு டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான வெளிபுற நோயாளி பிரிவை மருத்துவமனையின் இயக்குனர் அஜய் சுக்லா திறந்து வைத்தார்.

இந்த வெளிபுற நோயாளி பிரிவில் ஹார்மோன் பகுப்பாய்வு மற்றும் இலவச ஹார்மோன் சிகிச்சையுடன் கூடிய உட்சுரப்பியல் வசதி, மருத்துவ-உளவியல் மதிப்பீட்டுடன் மனநல மருத்துவ வசதி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆகியவை கிடைக்கும் என்று சுக்லா கூறினார்.

#WATCH | India's first transgender OPD was started in Delhi's Ram Manohar Lohia Hospital. It was inaugurated by Dr Ajay Shukla, Director of RML Hospital. pic. twitter.com/YmClGtxBxj

— ANI (@ANI) September 17, 2023
இதையும் படிக்க  |  18-ல் கூடும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்! முக்கிய அம்சங்கள் (ம) தாக்கலாகும் மசோதாக்கள் என்ன?