புதுமைப் பெண் திட்டம் 2.0.....

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கடந்தாண்டை விட 25 சதவீதம் உயர்கல்வியில் மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுமைப் பெண் திட்டம்:
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் 2ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெண் சமத்துவம்:
இதைத்தொடர்ந்து பேசிய அவர், நாடு செழித்து தன்னிறைவுடன் இருப்பதற்கு பெண்கல்வி மிகவும் அவசியம் என தெரிவித்தார். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கவே சமூகநீதித் தத்துவம் உருவாக்கப்பட்டது எனவும், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்டணமில்லா பேருந்து வசதியின் மூலம் 180 கோடி பயணங்களை பெண்கள் கட்டணமின்றி மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். அந்த வரிசையில் தொடங்கப்பட்ட மகத்தான புதுமைப்பெண் திட்டத்தால், உயர்கல்வி சேர்க்கை 25 சதவீதம் அதிகரித்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிக்க: விதிக்கப்படுமா வாரிசு வரி.....