ஏடிஎம் கொள்ளை எதிரொலி ; தீவிர வாகன சோதனையில் போலீசார்...தஞ்சாவூரில் பரபரப்பு!

ஏடிஎம் கொள்ளை எதிரொலி ; தீவிர வாகன சோதனையில் போலீசார்...தஞ்சாவூரில் பரபரப்பு!

திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை நிகழ்வு நடைபெற்றதன் எதிரொலியாக தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள ஏடி.எம் மையங்களில் புகுந்த மர்மநபர்கள் 75 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதையும் படிக்க : இலங்கை வசம் உள்ள படகுகளை விரைவில் மீட்க நடவடிக்கை...எல்.முருகன் உறுதி!

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத் உத்தரவின்படி வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் மற்றும் பிற மாவட்டங்களை இணைக்கும் 8 எல்லைகளில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது.