குற்றவாளிகளை அடையாளம் காணும்,.. அதி நவீன ட்ரோன் யூனிட் திட்டம் அறிமுகம்..!

குற்றவாளிகளை  அடையாளம் காணும்,.. அதி நவீன ட்ரோன் யூனிட் திட்டம் அறிமுகம்..!

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை ட்ரோன் மூலம் அடையாளம் காணும் திட்டத்தை  சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். 

சென்னை அடையாறு அருணாசலபுரம் முத்து லட்சுமி பூங்கா அருகே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ட்ரோன் யூனிட்டை தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தனர். இந்த ட்ரோன் மூலம் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிக்க முடியும். 9 ட்ரோன் யூனிட் செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்த ட்ரோன் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்கும், கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தலிக்கம் நபர்களுக்கு உதவி செய்ய முடியும்.கூட்ட நெரிசலை கண்காணித்து ஒழுங்கு படுத்த முடியும் வாகனங்களில் உள்ள எண்களை துல்லியமான கண்காணிக்க முடியும். 

ஒரு கூட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியை இந்த ட்ரோன் மூலம் அடையாளம் காணமுடியும்.
இந்தியாவிலேயே முதல் முதலாக இந்த ட்ரோன் யூனிட் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க    | தமிழ்நாட்டில் புதிய தலைமை அதிகாரிகள் நியமனம்..!