கனரக வாகனங்களை இயக்க இயற்கை எரிவாயு அறிமுகம்...!

கனரக வாகனங்களை இயக்க இயற்கை எரிவாயு அறிமுகம்...!

கார் ஆட்டோ போன்ற சிறிய ரக வாகனங்கள் மட்டுமல்லாமல் இனி பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் இயற்கை எரிவாயு மூலம் இயங்க வைக்கும் புதிய தொழில் நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ள நிலையில் இயற்கை எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு பொருத்தவரை முதல்கட்டமாக பெட்ரோல், டீசலில் இயங்கும் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு பொருத்தப்பட்டு அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை விட இயற்கை எரிவாயு விலை சற்று குறைவு. அதுமட்டும் அல்லாமல் மைலேஜும் அதிகம் கிடைக்கும் எனவே சிறிய ரக வாகனங்களில் இயற்கை எரிவாயுக்கான டேங் பொருத்தப்பட்டு  அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

style="text-align: center;">

இதையும் படிக்க     | href="https://www.malaimurasu.com/Attention-women-who-wear-shapewear-The-price-of-beauty-health" target="_blank" rel="noopener">ஷேப்வியர் அணியும் பெண்கள் கவனத்திற்கு...! அழகுக்கு விலை ,.. ஆரோக்கியமா...?

 இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகட்ததில்  தொடங்கப்பட்டுள்ள ஏஜி.பி பிரதம் என்ற தனியார் நிருவனம் ஒன்று தற்போது பேருந்து,லாரி, டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்களை இயற்கை எரிவாயு மூலம் இயங்க வைக்கும் திட்டத்தை துவங்கியுள்ளது. ஒரு சிறிய தொகை செலவிடுவதன் மூலம் கனரக வாகங்களை இயக்க வைக்க முடியும் என்கிறது இந்த நிறுவனம்.

src="https://www.malaimurasu.com/uploads/images/2023/06/image_600x460_647a1bbaeea4e.jpg" /> src="https://www.malaimurasu.com/uploads/images/2023/06/image_600x460_647a1bbd21116.jpg" />

 அதன்படி இந்திய மோட்டார் சட்டத்தின் மூலம் பலக்கட்ட சோதனைக்கு பின் இதற்கான கருவிகள் அங்கீகரிக்கப்பட்டதாகவும், இது 100 சதவீதம் பாதுக்காப்பானது என்றும் நிருவனம் தெரிவித்துள்ளது. இயற்கை எரிவாயு மூலம் வாகனங்களை இயக்கும் போது வழக்கமான எரிப்பொருள் செலவைவிட 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

src="https://www.malaimurasu.com/uploads/images/2023/06/image_600x460_647a1bb907670.jpg" /> src="https://www.malaimurasu.com/uploads/images/2023/06/image_600x460_647a1bb70327c.jpg" />

அதேபோல பெட்ரோல்,டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசைவிட, இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களில் காற்றும் மாசு மிகவும் குறைவு. இதனால் சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்,

src="https://www.malaimurasu.com/uploads/images/2023/06/image_600x460_647a1bbf3f406.jpg" width="903" height="692" style="display: block; margin-left: auto; margin-right: auto;" />

அதுமட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் இயற்கை எரிவாயு மற்றும் பேட்டரியால்  இயங்கும் வாகனங்களே விற்பனைக்கு வரும் என்ற நிலையில் ஏற்கனவே டீசலில் இயங்கும் கனரக வாகனங்கள் இயற்கை எரிவாயுவிற்கு மாற்றிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க     | href="https://www.malaimurasu.com/Teacher-Eligibility-Test-is-mandatory-for-promotions" target="_blank" rel="noopener">TET தேர்வில் தேர்ச்சி அவசியமில்லை...ஆனால், இதுக்கு கட்டாயம் வேண்டும் - நீதிமன்றம் அதிரடி!