
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மிகப்பெரிய ஒழுங்கற்ற தரைதளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற அகழாய்வு பணியில், ஒன்றரை அடி ஆழத்தில் ஒழுங்கற்ற வழுவழுப்பான தரைதளம் வெளிப்பட்டது. இதனையடுத்து அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக உள்ள பகுதிகளில் கூடுதலாக இரு குழிகள் தோண்டப்பட்டன. அதில் மிகப்பெரிய தரை தளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்ட தரைதளம் வழுவழுப்பான களிமண்ணால் ஆன தரை தளமாக உள்ளதால், அகழாய்வு பணிகளை ஆழப்படுத்தும் போதுதான் அதனுடைய உண்மையான பயன்பாடு தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.