மெட்ரோ கார்டு இருந்தா போதும் இலவசமா வாகனத்தை பார்க்கிங் - இது யாருக்கு பொருந்தும்?

மெட்ரோ கார்டு இருந்தா போதும் இலவசமா  வாகனத்தை பார்க்கிங் - இது யாருக்கு பொருந்தும்?

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் வாகனத்தை மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது. இந்த விரிவுப்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

மெட்ரோ இரயில் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையை பயன்படுத்தி நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை 28.04.2023 முதல் 31.05.2023 வரை எந்த கட்டணமும் இல்லாமல் நிறுத்தி கொள்ளலாம் இன்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com