ஓபிஎஸ் நிதானத்தில் தான் இருக்கிறாரா? என சந்தேகம் - ஜெயக்குமார் விமர்சனம்...

பிக்பாக்கெட் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் ஓ. பன்னீர்செல்வம் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ஓபிஎஸ் நிதானத்தில் தான் இருக்கிறாரா? என சந்தேகம் - ஜெயக்குமார் விமர்சனம்...

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரக்தியின் உச்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக தெரிவித்தார். பிக்பாக்கெட் போன்ற வார்த்தைகளை செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, அவர் நிதானத்தில் இருந்து தான் பேசுகிறாரா? என சந்தேக எழுவதாகவும், பிக்பாக்கெட் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் ஓபிஎஸ்  தான் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | உதயநிதி ஒரு கத்து குட்டி அவருக்கு எதுவும் தெரியாது!!! ஆவேசத்தில் ஜெயக்குமார்

தொடர்ந்து பேசிய அவர், கட்சிக்கும், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதிமுக என்ற பெயரை உபயோகிக்க கூட ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை எனவும் விமர்சித்தார். துக்கம் விசாரிக்க சென்ற திமுக தலைவருடன் ஓபிஎஸ் சிரித்து கொண்டு இருந்ததில் இருந்தே, அவர் திமுகவின் பி-டீமாக செயல்படுவது தெரியவருகிறது எனவும் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

மேலும் படிக்க | திமுக ஒன்றிய பெருந்தலைவரை கவுரவித்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர்...