அதிமுகவுக்குள் சசிகலாவுக்கு அனுமதியா..? முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பேட்டி...

சசிகலா வருகை குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி செயலாளருமான பா. வளர்மதி பேட்டி

அதிமுகவுக்குள் சசிகலாவுக்கு அனுமதியா..? முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பேட்டி...
சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா அருகில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான பா. வளர்மதி தலைமையில், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அப்பொழுது, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல் டீசல், விலை ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்தவில்லை,  நீட் தேர்வை ரத்து செய்யாமல் மாணவர்களை ஏமாற்றுகின்றனர், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவில்லை, அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பதாகைகள் மூலம்ஙேந்தி, முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  பா. வளர்மதி,
 
நீட் தேர்வு என்பது முக்கிய பிரச்சினை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தலின் போதே தெளிவாக மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்  என்ற வளர்மதி பொய்யான வாக்குறுதிகளை திமுக தெரிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.
 
தொடர்ந்து பேசிய வளர்மதி ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை மறைக்க திமுக முயல்கிறது. அவரது பெயரை அழிக்க முடியாது சசிகலா வருகை குறித்து, கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.