"ஆளுநர் என்பவர் ஆண்டவரா?" அமைச்சர் சேகர் பாபு கேள்வி...!! 

"ஆளுநர் என்பவர் ஆண்டவரா?" அமைச்சர் சேகர் பாபு கேள்வி...!! 

ஆளுநர் என்பவர் ஆண்டவரா? என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வில்லிவாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, "இந்து சமய அறநிலைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் வெறும் நான்கு ஆயிரம் ஏக்கர் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளது என ஆளுநர் கூறுகிறார். ஆனால் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளது. அதேபோல ரேவர் கருவி மூலம் நிலம் அளவீடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 1 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் இந்து சமய அறநிலையத்துறை இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதற்காக அரசை ஆளுநர் பாராட்ட வேண்டும். இன்னும் சொல்ல போனால் இந்து சமய அறநிலையத்துறை இடங்கள் கைப்பற்றப்பட்டதில் ஆக்கிரமிப்பு செய்தவர்களில் 6 பேர் பாஜக நிர்வாகிகள் எனக் கூறினார். 

அப்போது சிதம்பரம் நடராசர் கோயிலில் குழந்தை திருமணம் தொடர்பாக, சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக, ஆளுநர் வைத்துள்ள குற்றசாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு "ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை எனக் கூறிய அவர், சட்ட மீறலோ விதிமீறதலோ நடந்தால் அதை செய்பவர்கள் சிதம்பரம் தீக்ஷீதர்கள் என்றால் அவர்கள் மீது  சட்டம் பாயக்கூடதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.  

மேலும், "சிதம்பரம் தீக்ஷீதர்களுக்கு என தனியாக சட்டம் வகுத்து தரப்பட்டுள்ளதாக?" என கேள்வி எழுப்பிய அவர், சட்டம் அனைவருக்கும் பொதுவானது ஆகவே விதிமீறல் எங்கு நடைப்பெற்றாலும் அங்கு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் ஆளுநர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "ஆளுநர் என்பவர் ஆண்டவரா? எங்களை பொறுத்தவரை ஆளுநர் நாட்டிற்கு தேவை இல்லை" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!