’டீ கப்’ வழியாக மருந்து செலுத்திய விவகாரம்:  காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆய்வு...!

’டீ கப்’ வழியாக மருந்து செலுத்திய விவகாரம்: காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆய்வு...!

Published on

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் டீ கப்பில் மாணவனுக்கு சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டார தலைமை மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பெற வந்த மாணவர் ஒருவருக்கு மூக்கு வழியாக சுவாச வாய்வு செலுத்துவதற்கு டீ பேப்பர் கப்பை பயன்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் உத்திரமேரூர் வட்டார தலைமை மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அங்கு நடந்த சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்த அவர், வரும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவும், மருத்துவத்திற்கு சம்பந்தமில்லாத உபகரணங்களை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார். 

மாவட்ட ஆட்சியரின் திடீர் வருகையால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com