
மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பப்பதிவு முடிவடைகிறது.
இந்நிலையில், தகுதியுடைய மாணவிகள், இந்த திட்டத்திற்காக வெளியிடப்பட்ட இணையப்பக்கத்தில் தேவையான நகல்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.