ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையதல்ல - ஓ.பி.எஸ் பேச்சு!

ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையதல்ல - ஓ.பி.எஸ் பேச்சு!

தமிழக ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையதல்ல என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் காதணி விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினர் என கூறினார்.

இதையும் படிக்க: ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை அதிரடி உயர்வு...விளக்கமளிக்கும் அமைச்சர்!

மேலும், அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஆளுநரை பதவி விலக வேண்டுமென திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பன்னீர் செல்வம், தமிழக ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறினார்.