தேவர் குருபூஜையில் முதலமைச்சர் பங்கேற்க இருப்பதாக தகவல்...!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் அமைச்சா்கள், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, அரசியல் கட்சி தலைவா்கள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்ள உள்ளதால், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க : சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவுள்ள மீனவர்கள்...!

இந்நிலையில் இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.