ரேஷன் பொருட்கள் தரமற்றதாக இருப்பது உண்மை தான்,.! -அமைச்சர் மனோ தங்கராஜ் ஒப்புதல்.! 

ரேஷன் பொருட்கள் தரமற்றதாக இருப்பது உண்மை தான்,.! -அமைச்சர் மனோ தங்கராஜ் ஒப்புதல்.! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாக இருப்பது உண்மை தான் என ஆய்விற்கு பின் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட விருந்தினர் மாளிகையில் வைத்து தொழில்நுட்ப துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் முன்னிலையில்  வழக்கறிஞர்கள், டாக்டர்கள் என 25 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு உணவு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் அமைச்சர். மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடைகளுக்கு அரிசி சப்ளை செய்யும் அரசு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில்  உள்ள அரிசி மற்றும் உணவு பொருட்களின் தரத்தை சோதனை செய்த அவர், மாவட்டம் முழுவதும் தரமான உணவு பொருட்களை ரேஷன் கடைகளில் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கிட்டங்கியில் பூச்சிகள் வராதவண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள்களை சந்தித்த அமைச்சர், "மாவட்ட நியாயவிலை கடைகளில் வழங்கும் ரேஷன் அரிசியில் குறைபாடு இருப்பது உண்மைதான். முந்தைய அரசு கொள்முதல் செய்த தரமற்ற அரசி என்பதால் அதில் குறைபாடு உள்ளது. எனவே அந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "முடிந்த அளவுக்கு நல்ல அரிசியைத்தான் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இப்போது துறை சார்ந்த அமைச்சரோடு பேசி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அரிசியில் கறுப்பு தன்மை அதிகமாக இருக்கிறது. அதை மாற்றி கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அதை சரிசெய்வோம்" என்றும் தெரிவித்தார்.