எங்களுக்கு எதிர்காலம் இல்லை என நினைத்தால் அது தவறு... தேமுதிகவை அழிக்க முடியாது - விஜயகாந்த்...

எங்களுக்கு எதிர்காலம் இல்லை என நினைத்தால் அது தவறு... தேமுதிகவை அழிக்க முடியாது - விஜயகாந்த்...

தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். 
Published on

மூளை சலவை செய்பவர்களின் பேசை நம்பியும், ஆசை வார்த்தைகளை கூறி மோசம் செய்யும் கயவர்களை நம்பியும் ஒரு சிலர் கட்சியை விட்டுச் செல்வது ஒட்டுமொத்த கழகத்திற்கும் செய்யும் துரோகமாக கருதுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

மாற்று அணியினர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அவர்களுடன் செல்லும் போது அது உங்களை பலவீனமாக இருப்பதாக காட்டுவதாகவும், இதை எண்ணும் போது இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதை உணரும் நாள் வரும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். 

தனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மை தான் என்றும், அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம் என்றும் விஜயகாந்த் ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது எனவும், தேமுதிக வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்  எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர்களை கண்டிப்பதோடு அடையாளம் கண்டு தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com