தமிழ்நாட்டில் உதயமாக இருக்கிறது...! ராயல் என்ஃபீல்டு -ன் முதல் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை ..!

தமிழ்நாட்டில் உதயமாக இருக்கிறது...!    ராயல் என்ஃபீல்டு -ன் முதல் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை ..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பளவில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. 

Motorcycles | Latest Bikes in India | Two Wheelers | Royal Enfield
சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உலகின் மிக பழைமையான இருசக்கர வாகன நிறுவனம். தற்போது சென்னை அருகே ஒரகடம், வல்லம் வடகால் பகுதிகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2 ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்த இரண்டு ஆலைகளில் இருந்தும் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க     } நண்பகல் வேளையில் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்...!!