' ஜல் ஜீவன் ' திட்டம் முறைகேடு: அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை.

' ஜல் ஜீவன் ' திட்டம் முறைகேடு: அதிகாரிகள் பதிலளிக்க  வேண்டும்  - உயர் நீதிமன்ற மதுரை கிளை.
Published on
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரை  சேர்ந்த சரவணன், உயர்நீதி மன்ற  மதுரை கிளையில் அணு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார்.  

 அந்த மனுவில்:-  

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பை 2024-ம் ஆண்டுக்குள் வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்து, அந்த திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுத்து வருவதை குறிப்பிட்டு, 

இந்த திட்டம் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 38 கிராமங்களில் பல்வேறு ஊர்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டது என்றும், மேலும் சாத்தங்குடி, விருசங்குளம், நடுக்கோட்டை, கீழக்கோட்டை ஆகிய கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்புகள் வழங்கியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து உள்ளன என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும் அந்த மனுவில், " இந்த திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்", எனவும்  கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முறைகேடு புகார் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com