"வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கியது கண்டிக்கதக்கது" ஜெயகுமார்!

"வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கியது கண்டிக்கதக்கது" ஜெயகுமார்!

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கியது கண்டிக்கதக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை  நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை ராயபுரத்தில் அமமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவினர் மன்னர் குடும்பம் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், "தாக்குதல்காரர்களை வருமான வரித்துறை சும்மா விடாது" என குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் முதல், அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழல் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்தார். 

தொடர்ந்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் திமுக மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய ஜெயகுமார்,  தமிழ்நாட்டில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?