நரேந்திரமோடி அவர்களே..! உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது - ஜோதிமணி எம்.பி

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதையடுத்து ஜோதிமணி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

 நரேந்திரமோடி அவர்களே..! உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது - ஜோதிமணி எம்.பி

இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் இந்த ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து இந்த ஊர்தி அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களே, எங்கள் வீரவரலாற்றை, விடுதலைப்போரில் எமது தலைவர்களின் மகத்தான பங்களிப்பை, தியாகத்தை நாங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்துவோம். உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது. விடுதலைப் போரில் ஆங்கிலேயருக்கு துணைநின்ற உங்கள் சித்தாந்தம் விரைவில் வேரறுக்கப்படும்.' என பதிவிட்டுள்ளார்.