” ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி;என்.எல்.சிக்கு ஒரு நீதியா? “ - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல்.

” ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி;என்.எல்.சிக்கு ஒரு நீதியா? “  - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி என். எல்.சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஒரு நீதியா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் தாமிர  உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். 

அதே வேளையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு,  என். எல்.சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்? என்று வினவியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட என். எல்.சியால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆயிரம் மடங்கு அதிகம் என்று கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், ஸ்டெர்லைட் ஆலை  மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும்  என். எல்.சிக்கும் பொருந்துவதால் இனியும்  தாமதிக்காமல்  என். எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க   | மதுரையில் முக்கிய புள்ளியை களமிறக்க பாஜக திட்டம்?