கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. சிபிசிஐடி வேண்டுகோள்!!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. சிபிசிஐடி வேண்டுகோள்!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணையை பாதிக்கும் வகையில், தனிநபரோ அல்லது நிறுவனங்களோ புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரித்துள்ளது.

சிபிசிஐடி வேண்டுகோள்சிபிசிஐடி வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.  இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக, சிபிசிஐடி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவி மரண வழக்கில் புலன் விசாரணையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில், எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.

சிபிசிஐடி. எச்சரிக்கை

ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனங்களோ போலீசாரின் விசாரணைக்கு இணையாக புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால், அதனை 90038 48126 என்ற செல்போன் எண்ணுக்கு பகிரும்படியும் சிபிசிஐடி வேண்டுகோள்விடுத்துள்ளது.