காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா!!!

76வது சுதந்திர தினத்தை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி காவல்துறையினின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா!!!
Published on
Updated on
1 min read

நாட்டின் 76 வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின அமுதப் திருவிழாவை முன்னிட்டு  இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில், சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின் முவர்ண பலூனையும்,வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார். இதனைதொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு 1,19,92,239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார்.

இந்நிகழ்ச்சியில்  காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா, திட்ட அலுவலர் ஸ்ரீதேவி ,  வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com